பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிவகாசியில் உள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-02-01 19:16 GMT

சிவகாசி,

சிவகாசியில் உள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பத்திரகாளியம்மன் கோவில்

சிவகாசியில் இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நேற்று காலை 9.20 மணிக்கு ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு பல்வேறு பகுதியில் உள்ள புண்ணியநதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்களை கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம்

பக்தர்கள் பக்திபரவசத்தில் ஓம் சக்தி...பராசக்தி.... என்று கூறியவாறு கோபுரதரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், வணிகர்கள் சார்பில் அன்னதானம், மோர் ஆகியவை வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது.

இதை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அகன்ற திரையில் திரையிடப்பட்டதால் பக்தர்கள் எளிதில் பார்த்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்