ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு ஆலயத்தில் போதகராக இருந்தவர் ஜார்ஜ் (வயது 75). இவர் வத்திராயிருப்பில் இருந்து அழகாபுரி செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென கார் நிலை தடுமாறி மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜார்ஜ் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜார்ஜின் உடலை கைப்பற்றி பரிசோனைக்காக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.