அதிமுக செயற்குழு-பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2023-12-26 06:14 GMT

சென்னை,

அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிமுக செயற்குழு-பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

* இலங்கை தமிழர்கள் நலன் காக்க இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

* நாடாளுமன்ற தேர்தலையொட்டி குளறுபடி இல்லாத வாக்காளர்கள் பட்டியல் அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைப்பிடிக்காத பேரவைத்தலைவருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* மீனவர் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* அவசர கதியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த நினைக்கும் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றி மறுவாழ்வு அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கும் உண்டு என்பதை உணர்ந்து தேவையான நிதி உதவியை தமிழ்நாட்டுக்கு வழங்க முன்வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பெரும்பாலானவை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்