நடுவழியில் நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி
நடுவழியில் நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதியடைந்தனர்.
திருப்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ் தடம் எண் 31 வள்ளிப்பட்டு வரை நேற்று மாலை சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. ஜோலார்பேட்டை அருகே உள்ள பக்கிரித்தக்கா பகுதியில் சென்ற போது திடீரென முன்பக்க சக்கரம் பெஞ்சரானது. அதைத்தொடர்ந்து சாலையோரம் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் பயணித்த பயணிகள், மாணவர்கள் செய்வதறியாமல் பாதி வழியில் நின்று தவித்தனர்.
பின்னர் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதிக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை நடந்து சென்று மாற்று பஸ் மூலம் பயணித்தனர்.