பயணிகள் நிழற்குடை இன்றி மாணவிகள் அவதி

பயணிகள் நிழற்குடை இன்றி மாணவிகள் அவதி

Update: 2022-07-08 16:22 GMT

ஆனைமலை

ஆனைமலை அரசு பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை இன்றி மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அரசு பெண்கள் பள்ளி

ஆனைமலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, ஒடையகுளம், சின்னப்பம்பாளையம், சுப்பையா கவுண்டன்புதூர், அம்பராம்பாளையம், சுங்கம் போன்ற பகுதியில் இருந்தும், சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்தும் 1,200 மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பஸ்களில் வந்து செல்கின்றனர். ஆனால் பள்ளி முன்பு ஒதுங்கி நின்று பஸ் ஏற பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் மழை, வெயிலில் அவர்கள் அவதிப்பட நேரிடுகிறது. மேலும் சாலையோரங்களில் நிற்பதால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

நிழற்குடை வேண்டும்

இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது:-

எங்கள் பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பள்ளி முடிந்து செல்லும்போது வெயில் மற்றும் மழையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சாலையோரத்தில் காத்திருப்பதால், விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, எங்கள் பள்ளி முன்பு பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

----------------

Tags:    

மேலும் செய்திகள்