பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்
பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை சீக்கராஜபுரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் உள்ள சுவர்கள், தரை மிகவும் சேதமடைந்து வெடிப்புகள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் சிறுவர்கள், மாணவர்கள் அமர்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதுகுறித்து புகார் அளித்து 8 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்க வில்லை. விபத்தினை தடுக்க உடனடியாக சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பயணிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.