சர்வீஸ் சாலை வழியாக பஸ்கள் இயக்க பயணிகள் கோரிக்கை

வேலூரில் இருந்து ராணிப்பேட்டைக்கு சர்வீஸ் சாலை வழியாக பஸ்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-23 13:25 GMT

வேலூரில் இருந்து ராணிப்பேட்டைக்கு சர்வீஸ் சாலை வழியாக பஸ்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் அவதி

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த வள்ளலார் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் கடக்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலையில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் அதிகம்பேர் நெடுஞ்சாலையை கடக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

மேலும், மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் என பலர் தேசிய நெடுஞ்சாலையிலேயே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். பஸ்களை தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். அதிகமானவர்கள் தேசிய இதனால் நெடுஞ்சாலையிலேயே வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

சர்வீஸ் சாலையில்...

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், வேலூரில் இருந்து ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சர்வீஸ் சாலையில் வருவதில்லை. வேலூரில் இருந்து வரும் பஸ் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படுகிறது. எனவே வள்ளலார், ரங்காபுரம் போன்ற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வள்ளலாரில் இருந்த பஸ் நிறுத்த நிழற்கூடத்தையும் இடித்து விட்டனர்.

எனவே வள்ளலாரில் புதிய நிழற்கூடம் அமைக்க வேண்டும். வேலூரில் இருந்து வரும் டவுன் பஸ்கள் வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம் போன்ற பகுதிகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் சர்வீஸ் சாலையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்