திருச்சியில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது...!
திருச்சியில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
திருச்சி,
திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள், அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் உள்ளிட்ட பல ரெயில்கள் இயக்கப்பட் வருகிறது.
இந்நிலையில், பயணிகள் ரெயில் ஒன்று இன்று மாலை பொன்மலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் வந்த போது ரெயிலின் நடுவில் இருந்த இரு பெட்டிகளில் தண்டவாளத்தில் இருந்து திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனை அறிந்த ரயில் இன்ஜின் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1.30 மணி நேரம் போராடி பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர். பின்னர் ரயில் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தது. ரெயிலில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு என்பது இல்லை.
மேலும் ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.