மதுரை விமான நிலையத்தில் பயணி மயங்கி விழுந்து திடீர் சாவு
மதுரை விமான நிலையத்தில் பயணி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
மராட்டிய மாநிலம் உக்கட்புரி பகுதியை சேர்ந்தவர் தத்தாத்ரே பாலாஜி (வயது 72). இவர், தனது மனைவியுடன் விமானம் மூலம் மதுரைக்கு ஆன்மிக சுற்றுலா வந்துள்ளார். இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மனைவி விதாபாய் அளித்த புகாரின்பேரில், அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.