ரெயில் நிலையத்தில் பயணி சுருண்டு விழுந்து சாவு

நாகர்கோவிலில் ரெயில் நிலையத்தில் பயணி சுருண்டு விழுந்து சாவு

Update: 2022-12-11 18:45 GMT

நாகர்கோவில், 

கொல்லங்கோடு அருகே உள்ள நடைக்காவு, சாத்தங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 52). இவர் சென்னையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து ஊருக்கு புறப்பட்டார். இதற்காக அவர் நேற்று முன்தினம் மாலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

அந்த ரெயில் நேற்று காலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து லூக்காஸ் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் குழித்துறை செல்வதற்காக மற்றொரு ெரயிலில் ஏற 3-வது நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது லூக்காஸ் நடைமேடையில் திடீரென சுருண்டு விழுந்தார். இதை பார்த்த மற்ற ரெயில் பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். மேலும் ரெயில்வே டாக்டர் மற்றும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து லூக்காசின் உறவினர்களுக்கு ரெயில்வே போலீசார் தகவல் கொடுத்து வரவழைத்து அவர்களிடம் உடலை ஒப்படைத்தனர். லூக்காஸ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இயற்கை மரணம் என்பதால் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்