பசுபதி பாண்டியன் நினைவுதினம்:2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
தூத்துக்குடியில் பசுபதி பாண்டியன் நினைவுதினத்தை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அலங்காரத்தட்டில் உள்ள பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது 11-ம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமயில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், ஒரு உதவி போலீஸ் சூப்பிரண்டு, 20 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 60 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தாளமுத்துநகரில் நடந்தது. கூட்டத்தில் போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ேபாலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு விளக்கி கூறினார். கூட்டத்தில் தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்காரத்தட்டு பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.