மேல்மருவத்தூர்- விழுப்புரம் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை பகுதி நேரம் ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

Update: 2023-07-02 11:19 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மேல்மருவத்தூரில் இருந்து நாளை, 8-ந்தேதி, 10-ந்தேதி மற்றும் 15-ந்தேதிகளில் காலை 11.30 மணிக்கு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06725) முண்டியம்பட்டி - விழுப்புரம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

இதைபோல, மறுமார்க்கமாக அதே தேதிகளில் விழுப்புரத்திலிருந்து மதியம் 1.40 மணிக்கு மேல்மருவத்தூர் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06726) விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்