பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

திருவெண்காடு அருகே உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

Update: 2022-06-20 17:10 GMT
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே பார்த்தன்பள்ளி கிராமத்தில் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்யதேச கோவில்களில் ஒன்றாகும். மேலும், அகத்தியர் மற்றும் அர்ஜுனனுக்கு இந்த கோவிலில் தனி சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கொடியேற்றப்பட்டது

பின்னர், கொடிமரம் முன்பு எழுந்தருளிய பார்த்தசாரதி பெருமாள் முன்னிலையில் மேளதாளம் முழங்கிட கொடி ஏற்றப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கிருஷ்ணகுமார் பட்டாச்சாரியார், பட்டாபிராம பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்