நாடாளுமன்ற தேர்தல் பணிகள்: கமல்ஹாசன் இன்று ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கோவை,
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளுடன் அவர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
கோவையில் இன்று காலை 11 மணியளவில் இந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.