ரெயில் நிலையத்தில் நாடாளுமன்ற குழு ஆய்வு

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-01-07 18:45 GMT

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதிநவீன வசதிகள்

கன்னியாகுமரி ரெயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் ரெயில்வே நாடாளுமன்ற நிலை குழுவினர் தலைவர் ராதா மோகன்சிங் தலைமையில் நேற்று கன்னியாகுமரிக்கு வந்தனர். இந்த குழுவில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, கொடிக்குன்னில் சுரேஷ், சந்திராணி முர்மு, முகேஷ் ராஜ்புட், ரமேஷ் சந்தர், கோபால்ஜி தாகூர், சுமேர் சிங் சோலங்கி, கிருமேக்ட்டோ, நர்ஹாரி அமின், சாந்தி ராய், புலோ தேவி, அஜித்குமார், மாயாலிங்கி உள்பட 15 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

ரெயில் நிலையத்தில் ஆய்வு

இந்த குழுவினர் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் ரெயில் நிலைய விரிவாக்க திட்ட பணிகளை பார்வையிட்டனர்.

மேலும் அங்கு நடைபெற்று வரும் கூடுதல் ரெயில் பாதை அமைக்கும் பணி, நடைபாதை அமைக்கும் பணி மற்றும் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் குழுவினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டார்.

அப்போது விஜய் வசந்த் எம்.பி. ''குமரி மாவட்ட ரெயில் நிலையங்களை திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து மாற்றி மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக கன்னியாகுமரிக்கு வந்த குழுவினர் அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்