நாடாளுமன்றம் திறப்பு விழா "மே 28 தேதியில் இருக்கும் அரசியல்"- திருமாவளவன் பரபரப்பு பேட்டி
நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதியை அழைக்காததை கண்டிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி இருவருமே அழைக்கப்படவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளோம். புறக்கணித்துள்ளோம்.
இன்றைய தினத்தை விசிக கருப்பு நாளாக கடைபிடிக்கிறோம். அவர்களின் சனாதன அரசியலின் கொள்கை குரு சாவர்க்கரின் பிறந்தநாளான மே 28ம் தேதியை அவர்கள் தேர்வுசெய்ததை அரசியல் உள்நோக்கமாக கருதுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.