வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தமோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

பெரியகுளம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-10-06 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 36). சம்பவத்தன்று இரவு இவர், மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டதும் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து கணேசன், தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்