வீட்டின் முன் நிறுத்தியிருந்தமோட்டார்சைக்கிள் திருட்டு

கூடலூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-27 18:45 GMT

கூடலூர் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் வேதநாயகம் (வயது 47). டிரைவர். நேற்று முன்தினம் இவர், தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தியிருந்தார். நேற்று காலை பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடியும் மோட்டார்சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் கூடலூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வடக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்