காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.32 லட்சத்தில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

Update: 2022-11-19 18:45 GMT

தர்மபுரி:

காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சிறுவர் பூங்கா

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி 10-வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் காந்தி சிறுவர் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்காவில் பொதுமக்கள் நடை பயிற்சி செல்ல நடைபாதை, அழகிய செடிகள் மற்றும் புல் தரை, பொதுமக்கள் இளைப்பாற இருக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், அழகிய நீரூற்றுகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தீபனா விஸ்வேஸ்வரி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜன், உதவி செயற்பொறியாளர் கணேசமூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறுவர் பூங்கா அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

புதிய கட்டிடங்கள்

முன்னதாக காரிமங்கலம் ஒன்றியம் கும்பாரஅள்ளி ஊராட்சியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடம், உணவு அருந்தும் கூட கட்டிடங்கள் மற்றும் பொம்மஅள்ளி ஊராட்சியில் ரூ.24.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் அண்ணாமலைஅள்ளி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆ.மணி, மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், கோபால், அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுரி, தீர்த்தகிரி, தாசில்தார் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைவாணிமற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்