நாராயண சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி

களக்காடு சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-06-30 21:35 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று பரிவேட்டை விழா நடந்தது. இதையொட்டி மாலையில் அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவாரங்கள் புடைசூழ ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி மேளதாளங்கள் முழங்க பரிவேட்டையாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாைள மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்