பாரிவேந்தர் எம்.பி. குறித்து தவறான கருத்துகளை வெளியிட்ட யூடியூப் சேனல்-பத்திரிகை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மனு

பாரிவேந்தர் எம்.பி. குறித்து தவறான கருத்துகளை வெளியிட்ட யூடியூப் சேனல்-பத்திரிகை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-10-05 18:22 GMT

இந்திய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஏ.வி.ஆர்.ரகுபதி தலைமையில், அக்கட்சியினரும், மாவட்ட பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் சார்பில், அச்சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் அன்புதுரை தலைமையிலும், அச்சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர். அதில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவரும், பெரம்பலூர் தொகுதி எம்.பி.யுமான பாரிவேந்தர் குறித்து தனியார் யூடியூப் சேனலை சேர்ந்த நெறியாளர் ஒருவர், ஒரு பத்திரிகையின் ஆசிரியரிடம் பேட்டி எடுத்திருந்தார். அப்போது பத்திரிகை ஆசிரியர் பாரிவேந்தர் பற்றி தவறான கருத்துகளை கூறியதை அந்த யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. எனவே அந்த யூடியூப் சேனல் மீதும், அந்த பத்திரிகையின் ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்