கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் பரிசல் சவாரி

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பரிசல் சவாரி செய்தனர்.

Update: 2023-09-28 23:45 GMT

கொடைக்கானல் வனக்கோட்ட பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் பேரிஜம் ஏரி உள்ளது. நன்னீர் ஏரியான இங்கு செல்வதற்கு வனத்துறையினரின் அனுமதி பெற வேண்டும். இதற்கிடையே அங்கு பரிசல் சவாரி இயக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி மாவட்ட வன அலுவலர் ரூபேஷ் குமார் மீனா ஆலோசனையின் பேரில், நேற்று காலை முதல் பரிசல் சவாரி தொடங்கியது. இதனை வனச்சரகர் சுரேஷ்குமார் பார்வையிட்டு, சுற்றுலா பயணிகளுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார். நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பரிசல் சவாரி செய்தனர். 3 பரிசல்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் பல பரிசல்களை இயக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்