பரிமள ரங்கநாதர் கோவில் தேரோட்டம்

பங்குனி உத்திரத்தையொட்டி பரிமள ரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

Update: 2023-04-06 18:45 GMT

பங்குனி உத்திரத்தையொட்டி பரிமள ரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

பரிமள ரங்கநாதர் கோவில்

மயிலாடுதுறை திருவிழந்தூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோவில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும்.

திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற பழமை வாய்ந்த இந்த கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்யதேசமும் ஆகும். இக்கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

தேரோட்டம்

திருவிழாவின் 9-ம் நாள் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையடுத்து உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி உடனான பரிமளரெங்கநாதர் பெருமாள் தேரில் எழுந்தருள செய்யப்பட்டனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நகரசபை தலைவர் செல்வராஜ் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று 'கோவிந்தா, பரிமள ரெங்கா, நாராயணா' என்ற பக்தி முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். தேர் 4 வசதிகளையும் சுற்றிவந்து மீண்டும் நிலையை அடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்