கோவிந்தபுத்தூர் அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

கோவிந்தபுத்தூர் அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-16 19:00 GMT

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 790 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. 40 ஆண்டுகளை நெருங்கும் இந்த கட்டிடம் பல்வேறு இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஆசிரியர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். மேலும் கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்கள் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் பள்ளியின் மேற்கூரை அவ்வப்போது கீழே விழுந்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் அமர்ந்து படித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க பழுதடைந்த கட்டிடங்களை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்