பெருந்துறை அருகே அரசு பள்ளி ஆசிரியர் மீது பெற்றோர் புகார்
பெருந்துறை அருகே அரசு பள்ளி ஆசிரியர் மீது பெற்றோர் புகார்
பெருந்துறை அருகே சிங்காநல்லுார் அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தின் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள், "எங்கள் பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மனம் புண்படும்படி நடந்து கொண்டார். மாணவ- மாணவிகளை அடித்து வந்தார். எனவே அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பெருந்துறையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு பணிஇடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் வேறு பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல், சிங்காநல்லூர் பள்ளிக்கூடத்திலேயே பணியாற்ற முயற்சி செய்கிறார். எனவே அவரை எங்கள் பள்ளிக்கூடத்தில் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. அவரது பணி மாறுதல் உத்தரவை திரும்ப பெறவும் கூடாது", என்று கூறி இருந்தனர்.