பரமன்குறிச்சி மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்
பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் பணம் கையாடல் செய்ததாக வருவாய் மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பரமன்குறிச்சி மின்கட்டண அலுவலகத்தில் கடந்த 21-ந் தேதி உதவி செயற்பொறியாளர் பேச்சுமுத்து தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது, அந்த அலுவலகத்தில் மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்திய பணத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான சேமிப்பு கணக்கில் முழுமையாக செலுத்தாமல், ரூ.74 ஆயிரத்து 904-ம் குறைவாக செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பரமன்குறிச்சி அலுவலகத்தில் பணியாற்றிய வருவாய் மேற்பார்வையாளர் ராமசுப்பிரமணியன் கையாடல் செய்தாக கூறி, அவரை பணிஇடைநீக்கம் செய்து, திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ராமசுப்பிரமணியன் மீது திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.