பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் கருப்பையா வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் எடுத்து கூறி பேசினார். தொடர்ந்து துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன் பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் குடிநீர் வசதி, கழிவுநீர் வாய்க்கால் உள்பட பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக ஊழியர்கள் வந்துள்ளனர். பணி தெரியாததால் அவர்களால் பணி தாமதம் ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.