கோத்தகிரி பகுதியில் பூத்துக்குலுங்கும் காகித பூக்கள்-சுற்றுலா பயணிகள் ரசிப்பு

கோத்தகிரி பகுதியில் பூத்துக்குலுங்கும் காகித பூக்கள்-சுற்றுலா பயணிகள் ரசிப்பு

Update: 2022-10-08 18:45 GMT

கோத்தகிரி

நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் வாடா மலர்கள் என்று அழைக்கப்படும் காகித பூக்கள் பூக்கின்றன. இந்த பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது 40 நாட்கள் வரை வாடாத குணமுள்ளது. இந்த மலருக்கு மணம் கிடையாது. மேலும் இந்த மலர்களின் மேல் தண்ணீர் பட்டால் அதன் இதழ்கள் தானாக மூடிக் கொள்ளும். அதே போல சூரிய ஒளி படும்போது தானாகவே அதன் இதழ்கள் விரிந்துக் கொள்ளும் தன்மையுடையதாகும். இந்த மலர்களை பறித்து, கொத்தாகக் கட்டி ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு விற்பனையும் செய்யப்படுகிறது. இந்த அதிசய வகை மலர்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் உள்ள சோலைகள், சாலையோரங்களில் தற்போது இந்த காகித மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், சிலர் தங்களது செல்போனில் படம் எடுத்து கொள்கின்றனர். இது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்