பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மூலம் 4,808 பேர் பயன் அடைந்தனர்

Update: 2023-06-25 19:57 GMT

தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை தாலுகாக்களில் நடந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மூலம் 4,808 பேர் பயன் அடைந்தனர்.

மருத்துவ முகாம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா ராயமுண்டான்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

முகாமில் 1,513 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதேபோல் கும்பகோணம் தாலுகா திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமில் 1,585 பேரும், பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் திருமணமண்டபத்தில் நடந்த மருத்துவ முகாமில் 1,710 பேரும் பயன் அடைந்தனர். 3 இடங்களில் நடந்த மருத்துவ முகாம்கள் மூலம் மொத்தம் 4,808 பேர் பயன்பெற்றனர்.

பரிசோதனை

இதில் பொதுவான உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம், காசநோய் மற்றும் தொழுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் ராமசாமி, மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய்ஆனந்த், ஒன்றியக்குழு தலைவர் செல்லக்கண்ணு மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்