வங்கியில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

கயத்தாறில் வங்கியில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-01 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு- கடம்பூர் சாலையில் அமைந்திருக்கும் கனரா வங்கியில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென அலாரம் ஒலித்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் வங்கியை நோக்கி சென்றனர். பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும் வந்து வங்கியை சுற்றிப்பார்த்தனர். அங்கு இயற்கையாக அலாரம் ஒலித்தது தெரியவந்தது. பின்னர் தானாக வெகுநேரம் கழித்து நின்று விட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்