பங்குனி பொங்கல் விழா
சிங்கம்புணரி கக்கன்ஜி நகரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி கக்கன்ஜி நகரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று காலை கக்கன்ஜி நகர் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி பெரிய கடை வீதி வழியாக கோவிலுக்கு சென்று அங்கு அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.