பங்குனி பொங்கல் விழா

பங்குனி பொங்கல் விழா நடைபெறுகிறது.

Update: 2023-03-28 18:56 GMT

அலங்காநல்லூர், 

பாலமேட்டில் உள்ள இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் திருவிழா வருகின்ற 2-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி முடிவடைகிறது. இதையொட்டி கடந்த 26-ந் தேதி ெகாடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 2-ந் தேதி பத்திரகாளியம்மனுக்கு மலர் அலங்காரம், கண் திறப்பு விழா நடைபெறும். தொடர்ந்து அன்று இரவு பத்திரகாளியம்மனுக்கு, மாரியம்மன் சக்தி கரகம், அலங்காரம் செய்து வாணவேடிக்கையுடன் நகர்வலம் வரும் நிகழ்ச்சியும், மாரியம்மனுக்கு பொங்கல் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 3-ந் தேதி மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகிறார்கள். 4-ந் தேதி முளைப்பாரிகளுக்கு அபிஷேகமும் செய்து மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். 

Tags:    

மேலும் செய்திகள்