நாச்சியார் அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

பூதலூர் நாச்சியார் அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது.

Update: 2023-04-09 19:51 GMT

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூரில் உள்ள நாச்சியார் அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி திரளான பக்தர்கள் வெண்ணாற்றில் இருந்து கரகம் மற்றும் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பிரசாதமாக கஞ்சி வார்க்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்