சாயல்குடி,
கடலாடி கவுரவ செட்டியார் மகா சபைக்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன், நல்ல காமாட்சி அம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா நடைபெற்றது. கடந்த 4-ந் தேதி மாரியூர் கடற்கரையில் புனித நீராடி கொடியேற்றம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதையொட்டி திருவிளக்கு பூஜை, நல்ல காமாட்சி அம்மனுக்கு ஆற்றில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பால்குடம், அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சேத்தாண்டி வேஷம், ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நடந்த விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டியில் பெண்கள், ஆண்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கவுரவ செட்டியார் மகாஜன சங்கம், கவுரவ இளைஞர் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.