போலீஸ் தேடிய உறவினர் கைது

கும்பகோணம் அருகே ஊராட்சி துணை தலைவரை கத்தியால் குத்திய வழக்கில் போலீஸ் தேடிய உறவினர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2023-04-19 21:03 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் அருகே ஊராட்சி துணை தலைவரை கத்தியால் குத்திய வழக்கில் போலீஸ் தேடிய உறவினர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கத்திக்குத்து

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). இவர் பட்டீஸ்வரம் 4-வது வார்டு தி.மு.க. உறுப்பினராகவும் ஊராட்சி துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ராஜேந்திரன் பட்டீஸ்வரம் கடைத்தெரு பகுதியில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ராஜேந்திரனின் உறவினர் ஒருவருக்கும் ராஜேந்திரனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரனின் உறவினர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனை கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று வி்ட்டார்.

கைது

இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவா் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் ராஜேந்திரனுக்கும் அவரது உறவினரான குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும் முன்விரோதம் காரணமாக குமார் கத்தியால் ராஜேந்திரனை குத்தி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த குமாரை(36) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்