ஊராட்சி செயலாளர் சிகிச்சை பலனின்றி சாவு

ஊராட்சி செயலாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2022-06-20 19:54 GMT

விராலிமலை ஒன்றியம், மதயானைபட்டி ஊராட்சி செயலாளராக இருந்தவர் ராமசாமி (வயது 46). இவர் ஊராட்சி அலுவலக வேலை விஷயமாக கடந்த 14-ந் தேதி ஆவூரில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு மதயானைப்பட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது மாத்தூர்-இலுப்பூர் சாலையில் இருந்து ஆம்பூர்பட்டி பிரிவு ரோட்டில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த ராமசாமி தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். அதைப்பார்த்த அவ்வழியே சென்றவர்கள் ராமசாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த ஊராட்சி செயலாளர் ராமசாமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இறந்த ராமசாமிக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்