ஊராட்சி செயலாளர்கள் கூட்டம்
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் கூட்டம்
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் இ.கோபி தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். மேலாளர் ஆனந்தி வரவேற்றார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு, நிலுவையில் உள்ள வரிவசூல், தூய்மை பாரதம், அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து கேட்டறிந்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.
இதில் 39 ஊராட்சிகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.