ஊராட்சி செயலாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம்
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம் நடத்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் கொடுத்தனர்.
ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைமுருகனிடம் ஊராட்சி செயலாளர் சங்க செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஊராட்சி செயலாளர்கள் கடிதம் கொடுத்தனர். அதில், காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும், கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் விடுப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடர் விடுப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.