ஊராட்சி மன்ற தலைவியை வழிமறித்து தாக்கிய 2 பேர் கைது

ஒரத்தநாடு அருகே ஊராட்சி மன்ற தலைவியை வழிமறித்து தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவருடைய கணவர் மற்றும் மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-11-05 19:32 GMT

ஒரத்தநாடு அருகே ஊராட்சி மன்ற தலைவியை வழிமறித்து தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவருடைய கணவர் மற்றும் மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஊராட்சி மன்ற தலைவி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அருமுளை ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் வெண்ணிலா (வயது39). இவருடைய கணவர் நடராஜன். இவர்களுக்குள் கடந்த சில மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலாவை அவரது கணவர் நடராஜன், நடராஜனின் தந்தை ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் சாவித்திரி (38), நாகலட்சுமி (60) உள்ளிட்டோர் வழிமறித்து தாக்கினர்.

கணவர்- மாமனார்

இதில் காயம் அடைந்த வெண்ணிலா தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவித்திரி, நாகலட்சுமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் வெண்ணிலாவின் கணவர் நடராஜன், நடராஜனின் தந்தை ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்