வாணாபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு காட்சி பொருளாக இருக்கும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்

வாணாபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் காட்சிப்பொருளாக உள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பொதுமக்கள=் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-15 18:45 GMT

வாணாபுரம்

வாணாபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் காட்சிப்பொருளாக உள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சி மன்ற கட்டிடம்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாணாபுரத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு போலீ்ஸ் நிலையம் எதிரே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இருந்தது.

இந்த கட்டிடம் சேதமான நிலையில் இருந்து வந்ததையடுத்து நூலக கட்டிடத்துக்கு தற்காலிகமாக ஊராட்சி மன்ற அலுவலகம் மாற்றப்பட்டது. அதனை தொடர்்ந்து புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி பணிகள் தொடங்கி நடைபெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிவுற்றது.

ஆனால் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டிய நிலையில் உள்ளது. மேலும் ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் காட்சி பொருளாக இருப்பது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும், மது பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனிடையே தற்காலிகமாக நூலக கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் போதுமான இட வசதிகள் இல்லாமல் செயல்படுவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமல்லாமல் கட்டிடத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வயதானவர்கள் வந்து செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.

எனவே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் காட்சி பொருளாக இருக்கும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்