கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டம் இன்று பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஏ.சி.முனிசாமி வரவேற்றார். தீர்மானங்களை இளநிலை உதவியாளர் நித்யா வாசித்தார்.
இதில் பேருராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் வார்டுகளில் செய்யவேண்டிய பல்வேறு பணிகள் கூறினர். அதற்கு தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், துணைத்தலைவர் குமார், செயல் அலுவலர் முனிசாமி ஆகியோர் விளக்கமளித்தனர்.
பின்னர் அனைவரும் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.
கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்வது.
பேரூராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். நாய்களை கட்டுப்படுத்த அவைகளை பிடித்து கால்நடை துறையினர் மூலம் கருத்தடை மேற்கொள்ள வேண்டும்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.85 லட்சம் மதிப்பில் 2,5,11 மற்றும் 10 வார்டுகளில் உள்ள தெருக்களில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் 2 பேர் வந்து பல்வேறு சுகாதார ஆலோசனைகள் வழங்கினர்.