பஞ்சாயத்து தலைவியின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை

களக்காடு அருகே பஞ்சாயத்து தலைவியின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-16 20:23 GMT

களக்காடு:

களக்காடு அருகே பஞ்சாயத்து தலைவியின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பஞ்சாயத்து தலைவி மகன்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் வெள்ளச்சாமி என்ற துரை. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் தேவநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இவர்களது மகன் வெள்ளச்சாமி என்ற சுரேஷ் (வயது 27). இவருக்கு திருமணமாகி ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். சுரேஷ் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

சமீப காலமாக தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று சுரேஷ் வீட்டு மாடியில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்