ரூ.23 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

கடையம் அருகே ரூ.23 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-08-31 19:00 GMT

கடையம்:

கடையம் யூனியன் சிவசைலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ரூ.23 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.

தி.மு.க. கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஜகாங்கிர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மலர்மதி சங்கரபாண்டியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தொண்டர் அணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், பிரதிநிதிகள் யாகூப், பெருமாள்,

ஊராட்சி மன்ற தலைவர்கள் தருமபுரம் மடம் ஜன்னத் சதாம், பொட்டல்புதூர் கணேசன், மந்தியூர் கல்யாணசுந்தரம், மேல ஆம்பூர் குயிலி லட்சுமணன், கடையம் பெரும்பத்து பொன்ஷிலா பரமசிவன், சேர்வைக்காரன்பட்டி ரவிச்சந்திரன், கீழக் கடையம் பூமிநாத், ஒன்றிய கவுன்சிலர்கள் புஷ்பராணி, சுந்தரி மாரியப்பன, ஊராட்சி செயலர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சங்கர பாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்