பஞ்சமி நிலத்தை மீட்டு தர வேண்டும்கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

பஞ்சமி நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்

Update: 2023-08-30 22:34 GMT

தலித் விடுதலை இயக்கத்தின் மாவட்ட தலைவர் பொன் சுந்தரம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், 'ஈரோடு மாவட்டம் அந்தியூர், அத்தாணி, மாத்தூர் பகுதிகளில் அதிக அளவில் பட்டியல் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வசிப்பதற்காகவும், விவசாயம் செய்வதற்கும் உரிய நிலம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மாத்தூரில் நில குடியேற்ற கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் மூலம் நிலம் இல்லாத பட்டியல் இன மக்களுக்காக 250 ஏக்கர் பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை உரிய பயனாளிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அந்த நிலம் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. தற்போது அந்த நிலம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்