பஞ்சகல்யாணி பிரதிஷ்டை பெருவிழா
கீழ்வில்லிவளம் கிராமத்தில் பஞ்சகல்யாணி பிரதிஷ்டை பெருவிழா நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவளம் கிராமத்தில் பகவான் 1008 வருத்தமான மகாவீரர் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாணி பிரதிஷ்டை பெருவிழா மற்றும் நூதன ராஜகோபர கலச ஸ்தாபன விழா நடைபெற்றது.
இதையொட்டி மகாவீரருக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. கலசங்களை யானை மற்றும் குதிரை மீது அமர்ந்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக வந்து மகாவீரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கலச ஸ்தாபன விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மகாவீரருக்கு மங்கள ஆரத்தி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.