பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்
பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர
ராமேசுவரம்,
ராமேசுவரம் வந்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் மாவட்ட நாட்டு படகு மீனவர் நல உரிமை சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:- பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் பாரம்பரியமாக 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் பல ஆண்டுகளாக மீன்பிடித்தொழில் செய்து வருகிறோம். புயல், மழை மற்றும் சூறாவளி காலங்களில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியும் கரை ஒதுங்கியும் ஆண்டுதோறும் பல படகுகள் சேதம் அடைந்தும் வருகின்றன. பல மீனவர்கள் தங்கள் படகுகளை இழந்து கூலிக்குச் செல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.ஆகையால் கடந்த பல ஆண்டுகளாக பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன் பிடி துறைமுகம் அமைத்து தரக்கோரி அரசிடம் பல மனுக்கள் கொடுத்துள்ளோம்.இதுவரை எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவில்லை.தாங்கள் இந்த ஏழை மீனவர்களின் மீது கருணை கொண்டு தூண்டில் வளைவுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன் பிடித்து துறைமுகம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
்.