பனையேறும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் 4-வது நாளாக நீடிப்பு

விக்கிரவாண்டி அருகே பனையேறும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் 4-வது நாளாக நீடிப்பு

Update: 2023-05-30 18:45 GMT

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே பூரி குடிசையில் பனங் கள் இறக்க அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் பாண்டியன் தலைமையில் பனையேறும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடா் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன் தலைமையில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா, அட்மா குழு தலைவர் வேம்பி ரவி, ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ரவி ஆகியோர் பனையேறிகள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கள் இறக்க அனுமதி வழங்குவது குறித்து சட்ட மன்றத்தில் எம்.எல்.ஏ. பேசி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் எனவே போராட்டத்தை கைவிடுமாறு அதிகாரிகள் கூறினர். ஆனால் கள்ளசாரயம் வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும்வரை போராட்டம் தொடரும் என கூறினர். இதையடுத்து நேற்று 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்