தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு

தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-04-02 18:45 GMT

காளையார்கோவில், 

தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

குருத்தோலை ஞாயிறு

ஆண்டுதோறும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைபிடிப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை காளையார்கோவில் பங்கின் சார்பாக காளையார்கோவில் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குருத்தோலைகளை ஏந்தியவாறு பவனியாக புனித அருளானந்தர் ஆலயத்தை வந்தடைந்தனர்.

தொடர்ந்து சென்னை லிபா கல்லூரியின் இயக்குனர் அருள்முனைவர் ஜோ அருண் தலைமையில் தேவகோட்டை தே பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அருட்தந்தை வளன், அருட்தந்தை மரியராஜ், பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம், உதவி பங்குத்தந்தை சூசைராஜ் ஆகியோர் இணைந்து கூட்டு திருப்பலி நிறைவேற்றி னர். இதில் காளையார் கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி

காரைக்குடி செஞ்சை பங்கு புனித குழந்தை தெரசாள் ஆலயம் குருத்தோலை பவனியானது செஞ்சை ஊருணி தென்கரையிலிருந்து இறைமக்கள் பவனியாக குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு, தாவீதின் மகனுக்கு ஓசன்னா என்று முழங்கியவாறு ஆலயத்திற்கு சென்றார்கள். தேவகோட்டை தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி அருட்தந்தை மார்ட்டின் மற்றும் பங்குத்தந்தை அருள்முனைவர் ஜான் பிரிட்டோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இறை மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று திருப்பலியை சிறப்பித்தனர். காரைக்குடி செக்காலை பங்கு புனித சகாய மாதா ஆலயத்தில் குருத்தோலை பவனி ஆனது அம்பேத்கர் சிலையிலிருந்து செக்காலை ரோடு வழியாக ஆலயத்தை அடைந்தது. தொடர்ந்து பங்குத்தந்தை எட்வின் ராயன் தலைமையில் உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜா உள்பட ஏராளமான அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டு திருப்பலியை நிறைவேற்றினர்.

எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர் பிரான்சிஸ் சவேரியார் திருச்சபையில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்