விழுப்புரத்திற்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதம்

விழுப்புரத்திற்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்தது.

Update: 2023-06-05 18:45 GMT

சென்னையில் இருந்து காரைக்குடிக்கு தினமும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு மாலை 6 மணிக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

இந்த ரெயில், மதுராந்தகத்தில் வரும்போது ஏர் பிரேக் காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்குள்ள ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று ஏர் பிரேக்கை சரிசெய்தனர். அதன் பிறகு அங்கிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு நேற்று மாலை 6 மணிக்கு வர வேண்டிய பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 45 நிமிடம் தாமதமாக 6.45 மணிக்கு வந்தடைந்தது. அதன் பின்னர் அடுத்த 5 நிமிடங்களில் அந்த ரெயில் விழுப்புரத்தில் இருந்து காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றது. ரெயிலின் இந்த தாமதம் காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்