பள்ளப்பட்டி, வேப்பம்பாளையம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்

பள்ளப்பட்டி, வேப்பம்பாளையம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-10-15 19:10 GMT

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, பெரியசீத்தப்பட்டி, லிங்கநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டை, இறங்கனூர், வெடிகாரன்பட்டி, மொடக்கூர், புதுப்பட்டி, குறிகாரன்வலசு, அரவக்குறிச்சி டவுன், கரடிபட்டி, கொத்தபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இதேபோல் கரூர் வேப்பம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் சஞ்சய்நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூர், கோவிந்தபாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, பவித்திரம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரியம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்